• Sep 20 2024

68 வயது நடிகருடன் ஜோடி சேரும் நடிகை த்ரிஷா... யார் அந்த நடிகர் தெரியுமா...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் 20 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நிலைத்து நிற்கிறார் திரிஷா. இது வரை தனது மார்க்கெட்டை இழக்காமல் இருந்துவருகிறார். கொஞ்சம்  பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்தினம் குந்தவை கேரக்டரில் திரிஷாவை நடிக்க வைத்திருந்தார். அதன் பின்னர் நடிகை திரிஷாவுக்கு சினிமாவில் மார்க்கெட் உயர்ந்து சென்றுவிட்டது. கிட்டத்தட்ட நயன்தாராவின் இடத்தையே பிடித்து விட்டார்.


இப்போது த்ரிஷாவின் சம்பளம் எட்டிலிருந்து பத்து கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விஜய், அஜித் என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் இணைந்து விட்டார். ஏற்கனவே த்ரிஷா நடித்த தி ரோடு படம் அவருக்கு காலை வாரிவிட்டது. இனி அஜித்துடன் அவர் இணைந்து நடிக்கும் விடாமுயற்சி படம் தான் மீண்டும் அவரை தூக்கி விட வேண்டும். வாய்ப்பு வரும் பொழுது மொத்தமாக சம்பாதித்து விட வேண்டும் என்று முடிவெடுத்து திரிஷா அடுத்த நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க இருக்கிறார்.


தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 157 வது படத்தில் திரிஷா ஜோடி சேர இருக்கிறார். இந்த படம் பேண்டஸி திரைப்படம் ஆக வெளியாக இருக்கிறது. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் சிரஞ்சீவிக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெகா 157 என தற்போதைக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை இயக்குனர் மல்லிகை வசிஷ்டா இயக்குகிறார்.

Advertisement

Advertisement