தமிழ் சினிமாவில் கடலோரக் கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை ரேகா.இந்த படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களாக இருந்த கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் உட்பட பல நடிகர்களுடன் நடித்திருக்கின்றார்.
மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு பல படங்களில் நடித்திருக்கின்றார்.இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். இது தவிர பிக்பாஸ் மற்றும் குக்வித் கோமாளி போன்ற ரியாலிட்ரி ஷோக்களிலும் கலந்து பிரபல்யமானார்.தற்போது இவர், "மிரியம்மா" என்ற படத்தில் கர்ப்பிணியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் மிரியம்மா திரைப்படத்தில் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
இப்படத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய இவர், பாரதிராஜா சார் எப்படி கடலோர கவிதைகள் படத்தில் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தாரோ அதே போல, மிரியம்மா படத்தில் ஒரு நல்ல கேரக்டர் எனக்கு கிடைத்து இருக்கிறது. இதற்கு காரணமான இயக்குநருக்கு ரொம்ப நன்றி.
முன்பு கதாநாயகனுக்கு சரிசமமாக கதாநாயகி பாத்திரம் இருந்தது. ஆனால், அந்த நிலை மாறி தற்போதைய நாயகிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது. 40 வயசானாலே நடிகைகளை கறிவேப்பிலை போல தூக்கிப்போடுறாங்க என்று நடிகை ரேகா அந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!