தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல ஆண்டு காலமாகத் திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். சுமார் 65 இற்கு அதிமான படங்களில் நடித்துள்ள இவரின் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகின்றது.
இப்படத்தை வம்சி பிரமாண்டமாக இயக்கியுள்ளார். இப்படம் குறித்த ஒரு சில விஷயங்கள் இணையத்தில் அடிக்கடி லீக்காகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் சமீபத்தில் தான் அப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து இருக்கிறது.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் ஆனது வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.
இதனால தற்போது ரசிகர்கள அனைவரும் அப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் விறுவிறுப்பாக மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதற்காக பெரியளவிலான ஹெலிகாப்டர் எல்லாம் பயன்படுத்தி விஜய்யின் மாஸ் காட்சி எடுத்துள்ளதாக தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்போது படபிடிப்பு தளத்தில் பயன்படுத்திய ஹெலிகாப்டரின் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளங்களில் பரவி வருகிறது.
Listen News!