• Nov 17 2024

அடேங்கப்பா.. ஸ்ரீதேவி பிறந்த வீட்டை பாருங்க... எவ்வளவு பெரிதாக இருக்கு.. இப்போ இந்த வீட்டில யார் இருக்காங்க தெரியுமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து கொடி கட்டிப் பறந்த பெண் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் 1969-ஆம் ஆண்டு 'துணைவன்' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். மேலும் அப்படத்தில் கடவுள் முருகன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தமிழில் கதாநாயகியாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீதேவி தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் 300 இற்கும் அதிகமான படங்களில் நடித்து டாப் நாயகிகளில் ஒருவராக வலம் வந்தார்.


இறுதியாக இவர் நடிப்பில் உருவான 'மாம்' திரைப்படமானது அவரின் 300 ஆவது படமாக அமைந்துவிட்டது. தன்னுடைய சிறந்த நடிப்பின் வாயிலாக பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். அந்தவகையில் இவர் வாங்காத விருதுகள் என்று எதுவுமே கிடையாது, அதுமட்டுமல்லாமல் இவரைக் கொண்டாடாத ரசிகர்களே இல்லை என்றும் கூறலாம்.


இவ்வாறாக தன்னுடைய திறமையை பல வழிகளிலும் வெளிப்படுத்தி வந்த ஸ்ரீதேவி பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு அழகான மகள்கள் உள்ளார்கள்.


எதிர்பாராத விதமாக ஸ்ரீதேவி இறந்து விட்டாலும் இன்றும் பலரின் மனங்களில் வாழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றார். இந்நிலையில் தற்போது ஸ்ரீதேவி பிறந்த வீட்டின் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


அதாவது விருதுநகர் மாவட்டம், சிவகாசி பக்கத்தில் உள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் தான் நடிகை ஸ்ரீதேவியின் பூர்வீக வீடு அமைந்திருக்கின்றது. அந்த வீட்டில் இப்போது ஸ்ரீதேவியின் பெரியப்பா அவர்கள் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement