தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னம் இயக்கியுள்ள பிரம்மாண்ட படைப்பே 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் திகதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது.
இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என மிகப்பெரிய திரையுலக நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் உடைய ப்ரோமோஷன் நிகழ்வுகள் விறு விறுப்பாக இடம்பெற்று வருகின்ற இந்த நேரத்தில் அவர்களுக்கு இப்படத்தில் நடிப்பதற்காக வழங்கப்பட்ட சம்பள விபரம் ஆனது தற்போது வெளியாகி இருக்கின்றது.
அந்தவகையில் நடிகை ஐஸ்வர்யா ராய் இப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க அவருக்கு ரூ.10 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழில் கடைசியாக ரஜினியுடன் 'எந்திரன்' படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு கழித்து இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்து நடிகர் விக்ரம் இப்படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ.12 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம்.
அதுமட்டுமல்லாது இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளிலேயே விக்ரமுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோன்று தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடிப்பில் பட்டையை கிளப்பி வரும் வரும் த்ரிஷா இப்படத்தின் வாயிலாக முதன்முறையாக சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார்.
இதில் இவர் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ரோலில் நடிப்பதற்காக அவருக்கு ரூ.2.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
மேலும் பொன்னியின் செல்வன் கதையைப் பொறுத்தவரை ராஜ ராஜ சோழன் தான் ஹீரோ. அத்தகைய பவர்புல்லான வேடத்தில் தான் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதும் இதுவே முதன்முறை. இப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடிக்க அவருக்கு ரூ.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
பொன்னியின் செல்வனை இதற்கு முன்னர் படமாக்க முயற்சித்தபோது எம்.ஜி.ஆர்., விஜய் போன்ற ஜாம்பவான் நடிகர்கள் பலரும் நடிக்க விரும்பிய கதாபாத்திரம் என்றால் அது வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரம் தான்.
தற்போது அந்த கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். இப்படத்தில் நடித்ததற்காக கார்த்திக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் சுந்தர சோழனாக நடித்த பிரகாஷ் ராஜ் மற்றும் வானதியாக நடித்துள்ள ஷோபிதா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேபோல் பூங்குழலியாக நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரூ.1.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறாக 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த பிரபலங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளமை ரசிகர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Listen News!