தென்னிந்திய சினிமாவில் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'டார்லிங்' என்ற படத்தில் அழகிய பேயாக நடித்து ரசிகர்கள் மனதை முதல் படத்திலேயே கவர்ந்து இழுத்திருக்கின்றார்.
அறிமுகப்படத்திலேயே தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையினால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்தவகையில் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, ஹர ஹர மஹாதேவகி, சார்லி சாப்ளின் 2, யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம்' போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.
இவ்வாறாக படங்களில் பிஸியாக நடித்து வந்த நிக்கி கல்ராணி நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதாவது 'மிருகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வந்தவர் நடிகர் ஆதி. இவருடன் இணைந்து 'யாகாவாராயினும் நாகாக்க' மற்றும் 'மரகத நாணயம்' ஆகிய படங்களில் நிக்கி கல்யாணி ஜோடியாக நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ரகசியமாக காதலித்து வந்தனர். எனினும் சில சமயங்களில் இருவரும் ஒன்றாக அவுட்டிங் சென்ற போது மீடியாக்களின் கண்களில் சிக்கி கிசுகிசுவிற்கும் ஆளாகி இருந்தனர். பின்னர் ஒருவழியாக இரு வீட்டு பெற்றோரும், இவர்களுடைய காதலுக்கு பச்சை கொடி காட்ட அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இத்திருமணம் கடந்த மே மாதம் 18-ஆம் திகதி மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையில் இணைந்த நிக்கி கல்ராணி திரையுலகில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் ஆதி பிஸியாக நடித்து வருகின்றார். அதுமட்டுமல்லாது இவர்கள் இருவரதும் குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோசமாக நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது திருமணம் ஆகி 100 நாள் ஆனதை கொண்டாடுவதற்காக இந்தத் தம்பதிகள் இருவரும் பாரிஸிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஓவர் ரொமான்டிக்காக ஒரு கையில் மதுவை வைத்து கொண்டு, மற்றக்கையினால் தன்னுடைய காதல் மனைவி நிக்கி கல்ராணியை ஆதி கொஞ்சும் ரொமான்டிக் போட்டோஸ் ஒன்று வெளியாகி இருக்கின்றது.
இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருவதோடு "மதுவோடு தான் கொண்டாட்டமா?" எனக் கிண்டலாகக் கேட்டு தமது கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அப்புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!