தன்னை அடித்து கொலை செய்துவிட்டதாக விஜே சித்ராவின் ஆவி தெரிவித்திருப்பது என்று வெளியான செய்தி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜே சித்ரா மரணம் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றது அவரின் ரசிகர்களிடத்தே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் குறிப்பாக சித்ராவின் கணவரான ஹேமந்த் தனது உயிருக்கு ஆபத்தென்று கூறிய பிறகே சித்ரா மரணம் குறித்து அவரது பெற்றோரும் நண்பர்களும் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதேபோல் சித்ராவின் தோழியான ரேகா நாயரும், சித்ராவை ஹேமந்த் மட்டும் கொலை செய்யவில்லை ஹேமந்துடன் சேர்ந்து மேலும் 4 பேர் அவரை கொலை செய்துள்ளதாக தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ஆவிகளுடன் பேசும் கதிர் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜே சித்ரா ஆவியுடன் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
சித்ராவின் தாயார், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, ஹேமந்த்தான் அவரை அடித்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்து வருகிறார். சித்ராவின் உடம்பில் பல்லால் கடித்த காயங்களும் ரத்தக்கட்டுகளும் இருந்ததாகவும் அவரது அம்மா கூறி வருகின்றார். பணத்துக்காக ஏற்பட்ட பிரச்சனையில் சித்ராவை ஹேமந்த் அடித்து கொன்றுவிட்டார் என குற்றம்சாட்டி வருகிறார்.
மேலும் அந்த வீடியோவில் சித்ரா பேசியதாக பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதில் உங்களுடைய மரணம் தற்கொலையா கொலையா என கதிர் கேட்க, அடிச்சு கொன்னுட்டான் என்கிறது சித்ராவின் ஆவி. மேலும் அந்த குற்றவாளிகள் எங்கே இருக்கிறார்கள் என்று கேள்விக்கு மதுரையில் என்று பதில் வருகிறது. தொடர்ந்து உங்களுக்கு குடி பழக்கம் இருப்பதாக ரேகா நாயர் கூறுகிறாரே என்று கதிர் கேட்க, ஒயின் மட்டும் குடிப்பேன்.. அவள் எப்போ பார்த்தாள் என கேட்கிறது சித்ராவின் ஆவி.
ஏன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து காரில் அவ்வளவு வேகமாக வந்தீர்கள் என்ற கேள்விக்கு ஹேமந்த் கூட்டாளி 10 நிமிஷத்துல வரணும் சொன்னான் என்று கூறும் சித்ராவின் ஆவி, தன்னை வெளியில் வராதப்படி கட்டு போட்டு வைத்துள்ளார்கள் சித்ரவதை செய்தார்கள் என கதறி அழுதுள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்த்த சித்ராவின் ரசிகர்கள் கண்ணீர்விடும் ஈமோஜியை ஷேர் செய்து வருகின்றனர்.
அத்தோடு இந்த வீடியோ நிரூபிக்கப்பட்டது இல்லை, யாரையும் நம்ம வைக்கும் நோக்கமில்லை என்ற கேப்ஷனோடு ஷேர் செய்துள்ள கதிர், வீடியாவின் தொடக்கத்திலும் அதை திருப்பி திருப்பி சொல்கிறார். எனினும் சித்ராவின் இந்த சோல் பாக்ஸ் இண்டர்வியூ வீடியோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஷேர் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோவை சித்ராவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- விடுதலை திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- இரண்டு பாகமாக வெளியாகவுள்ளதாம்
- ‘கடைசியில் அவர் பூனை மற்றும் நாயுடன் தான் சாகப் போகின்றார்’- சமந்தா குறித்து டுவிட் போட்ட நபர்
- நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க முடிவு செய்த ரூசோ பிரதர்ஸ்-அட சூப்பர் தகவலாச்சே
- ஹைதராபாத்திற்கு தனி விமானத்தில் சென்ற நடிகர் அஜித்- AK61 லேட்டஸ்ட் அப்டேட்!
- ‘ஒரு முடிவோட தான் இது எல்லாம் பண்ணுறீங்க போல’-ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விமர்சித்து வரும் ரசிகர்கள்
- மலேசியா மற்றும் துபாயின் புர்ஜ் கலிஃபா ஆகிய இடங்களில் நடக்கும் விக்ரம் படத்தின் ப்ரமோஷன்
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!