• Nov 17 2024

'ஆதிபுருஷ்' படத்தின் திரை விமர்சனம்... ராமராக பிரபாஸ் அசத்தினாரா..? இல்லையா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் மற்றும் க்ரித்தி சனோன், சைஃப் அலி கான் ஆகியோர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இப்படமானது இன்றைய தினம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்கரு 

பொதுவாகவே ராமாயணக் கதை அனைவரும் அறிந்த ஒன்று தான். அதாவது கைகேயிக்கு தனது அப்பா தசரதர் கொடுத்த வரத்தின் காரணமாக ராஜ்ஜியத்தை விட்டு 14 ஆண்டுகள் ராமரான ராகவன் (பிரபாஸ்) தனது மனைவி சீதாவாகிய ஜானகி (க்ரித்தி சனோன்) மற்றும் தம்பி லக்‌ஷ்மணனான சேஷுவுடன் வனவாசம் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் எதிர்பாராத விதமாக பொய் மானை வைத்து ராகவனையும் சேஷுவையும் திசை திருப்பி விட்டு முனிவர் வேடத்தில் வந்து ஜானகியை ராவணன் (சைஃப் அலி கான்) கவர்ந்து கொண்டு இலங்கைக்கு செல்கிறார். 

இதனைத் தொடர்ந்து அனுமனின் (தேவதத்தா நாகே) உதவியை நாடி வானரப்படையுடன் இணைந்து ராமர் பாலத்தைக் கட்டி இலங்கைக்கு சென்று ராவணனை வதம் செய்து சீதையை ராமர் எப்படி மீட்டு வருகிறார் என்பது தான் இந்த படத்தின் உடைய மீதிக்கதையாக அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு 

அந்தவகையில் ராமராக நடிகர் பிரபாஸ் அட்டகாசமாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அவரது உடல்மொழி, தோற்றம் ஆகியன ஆரம்பத்தில் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், படத்தில் அமோகமான காட்சிகள் இடம்பெற்று பிரபாஸ் ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியுள்ளார்.

அதேபோல் வில்லனாக நடித்துள்ள சைஃப் அலி கானின் தோற்றம், அவரது பத்து தல, வவ்வால் வாகனம் என எதையுமே மாற்றாமல் அப்படியே வைத்திருக்கின்றனர். இது அவரை வேற லெவலில் பிரதிபலித்துக் காட்டுகின்றது. 

அதுமட்டுமல்லாது மார்வெல் படங்களை பார்ப்பது போல அவரது சேனை மற்றும் இலங்கை அரண்மனை என அனைத்துமே வித்தியாசமாக கண்ணைக் கவரும் விதத்தில் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது.


பலம் 

அந்தவகையில் இப்படத்தில் பிரபாஸின் நடிப்பு அமோகமாக உள்ளது. 

அதேபோல் க்ரித்தி சனோன் சீதையாக ஆரம்பத்தில் ரம்யமாகவும், அதன் பிறகு அசோக வனத்தில் சோகமே உருவானவராகவும் நடிப்பில் கலக்கி உள்ளார்.

மேலும் ராமருக்கும் லக்‌ஷ்மணருக்கும் சீதைக்கும் ஆதரவாக வரும் ஆஞ்சநேயர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தேவதத்தா நாகே நடிப்பு பாராட்டக்கூடிய அளவிற்கு சிறப்பாக உள்ளது. 

அதேபோல் ராவணன் சீதையை கடத்திச் செல்லும் போது ஜடாயு நடத்தும் சண்டைக் காட்சியும் வேற லெவலில் மாஸாக உள்ளது.

பலவீனம் 

இப்படத்தில் உள்ள பலவீனம் என்னவெனில் முதல் பாதி இருந்த அளவுக்கு இரண்டாம் பாதி சூப்பராக இல்லை என்று தான் கூற வேண்டும்.  

அதேபோல் 500 கோடி பட்ஜெட்டிற்கு எடுத்துள்ள இப்படம் சொல்லிக் கொள்ளும் படி தரமாக இல்லை. அதாவது 6 மாத காலம் மீண்டும் சிஜி ஒர்க் பண்ணியிருப்பது சில இடங்கள் குறிப்பாக அந்த டிரைலருக்கு மட்டுமான வேலையாக மட்டுமே தெரிகிறது.

தொகுப்பு 

மொத்தத்தில் ஆதிபுருஷ் படமானது காட்சியளவில் பல இடங்களில் இது ராமாயணம் தானா? அல்லது வேறு ஏதாவது கதையா? என்ற எண்ணத்தையே வரவழைத்து இருக்கின்றது. எனவே இப்படமானது வெற்றியைப் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement