• Nov 11 2024

ராமர் மீது கொண்ட தீவிர பக்தியால்... 'ஆதிபுருஷ்' பட டிக்கெட்டுகளை இலவசமாக கொடுக்கும் தயாரிப்பாளர்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள வரலாற்றுக் கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தை ஓம் ராவத் என்பவர் இயக்கி உள்ளார். 

மேலும் இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சனோன் நடித்து இருக்கிறார். அத்தோடு இராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்துள்ளார்.


பிரமாண்டமாக தயாராகியுள்ள இப்படமானது தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் மாதம் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஆதி புருஷ் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வித்தியாசமான முறையில் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் 'ஆதிபுருஷ்' படத்துக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 படங்களின் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் ராமர் மீது கொண்ட அமோக பக்தியின் காரணமாக இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.


அந்தவகையில் தெலுங்கானாவில் உள்ள அரசு பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு இலவச டிக்கெட்டுகளை அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் "ஆதிபுருஷ் வாழ்நாளில் ஒருமுறை வரும் திரைப்படம், இது நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு படம். 

ஸ்ரீராமர் மீதுள்ள எனது தீவிர பக்தியின் காரணமாக, அரசு பள்ளிகள், அனாதை இல்லங்களுக்கு 10,000 டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளேன். தெலுங்கானா முழுவதும் உள்ள முதியோர் இல்லங்கள் இதனை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்கள் இதனை பெற முடியாது" எனதத் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement