இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் தான் ஆதிபுருஷ்.ராமாயணத்தை பின்னணியாக வைத்து மோசன் கேப்சர், 3டி டெக்னாலஜியில் இப்படத்தை இயக்கியிருந்தார் இப்படத்தின் இயக்குநர்.
பிரபாஸுடன் சயிப் அலிகான், கிருத்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆதிபுருஷ் முழுவதும் மோசன் கேப்சர் டெக்னாலஜியில் உருவானதால், படத்தின் பட்ஜெட் 600 கோடிக்கும் அதிகமாக சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் படம் வெளியாகும் முன் ப்ரோமோஷனுக்காகவும் பல கோடிகள் செலவு செய்யப்பட்டது.
இந்நிலையில், முதல் மூன்று நாட்களில் மொத்தமே ரூ.230 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முதல் நாளில் இந்தியாவில் 60 கோடியும், வெளிநாடுகளில் 20 கோடியும் என மொத்தம் ரூ. 80 கோடி வசூலித்திருந்தது. இரண்டாவது நாளில் இந்தியில் 30 கோடியும் தெலுங்கில் 40 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தி, தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் சுத்தமாக வசூல் இல்லை என சொல்லப்படுகிறது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் இரண்டாவது நாள் மொத்த வசூல் 80 கோடி ரூபாய் தான் . இந்நிலையில், முதல் வார இறுதிநாளான நேற்று ஆதிபுருஷ் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று இந்தப் படம் மொத்தமே 64 கோடி ரூபாய் தான் வசூலித்துள்ளதாம்.
இதன்மூலம் முதல் வார இறுதியில் 126 முதல் 135 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், முதல் 3 நாட்களிலேயே பெரிய அளவில் வசூல் இல்லாததால், இனிவரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்றே சொல்லப்படுகிறது. இதனால் பிரபாஸ் உட்பட ஆதிபுருஷ் படக்குழுவினர் சோகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!