இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட், 3டி, மோஷன் கேப்சர் டெக்னாலஜி என ஹாலிவுட்டுக்கே சவால் விடும் வகையில் உருவாகி நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் ஆதிபுருஷ். ஆனால், இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு, விமர்சனம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது.
ராமாயணத்தை மார்டன் வெர்ஷனில் பட்டி டிங்கரிங் செய்து, 2கே கிட்ஸ்களுக்காக எடுக்கப்பட்ட கார்ட்டூன் மூவி போல இருப்பதாக ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆதிபுருஷ் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியான போதே அதன் கிராபிக்ஸ் காட்சிகளை ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று வெளியான ஆதிபுருஷ் முதல் நாளில் உலகம் முழுக்க 60 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம்.
உலகம் முழுவதும் 4000 ஸ்க்ரீன்களில் ரிலீஸாகியும் 60 கோடி வரை மட்டுமே கலெக்ஷன் ஆகியுள்ளது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ப்ரீ புக்கிங்கில் 3.5 கோடி ரூபாய் வசூலித்த ஆதிபுருஷ், இந்தியாவில் 50 முதல் 55 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளது. இதில், தெலுங்கில் 38 கோடி வரையும், இந்தியில் 10 கோடியும், மற்ற மொழிகளில் 5 கோடிகளும் வசூலித்துள்ளதாம்.
முக்கியமாக தமிழ்நாட்டில் சில பல லட்சங்கள் கூட வசூலாகவில்லை என சொல்லப்படுகிறது. நேற்றே சென்னை உட்பட பல நகரங்களில் ஆதிபுருஷ் படத்துக்கு டிக்கெட் புக்கிங் ஆகாமல் க்ரீனாக இருந்தது.இந்தியா முழுவதும் 50 முதல் 55 கோடியும், உலகம் முழுவதும் 60 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாம் .
இதனால் முதல் வாரத்தில் அதிகபட்சமாக 150 முதல் 170 கோடி வரை கலெக்ஷன் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் மிக மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிபிடத்தக்கது.
Listen News!