• Sep 20 2024

கோடி ரூபாய்க்கு ப்ரீ புக்கிங்... ரிலீஸிற்கு முன்பாகவே மாஸ் காட்டும் 'ஆதிபுருஷ்'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள வரலாற்றுக் கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தை ஓம் ராவத் என்பவர் இயக்கி உள்ளார். 

மேலும் இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சனோன் நடித்து இருக்கிறார். அத்தோடு இராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்துள்ளார். 


பிரமாண்டமாக தயாராகியுள்ள இப்படமானது தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் மாதம் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.  

இந்நிலையில் இப்படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் இப்படத்திற்காக புக்கிங் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் ப்ரீ புக்கிங்கில் இதுவரை 300 கோடி ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனையறிந்த பிரபாஸ் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.


Advertisement

Advertisement