பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள வரலாற்றுக் கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் தான் 'ஆதிபுருஷ்'. ஓம் ராவத் இயக்கிய இப்படமானது இராமாயணத்தை மையமாக கொண்டமைந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக திரைக்கு வந்த இந்த திரைப்படத்தை தடை செய்யக்கோரி தற்போது பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் படத்தை தடை செய்யக்கோரியும், ஓடிடியில் வெளியிடக் கூடாது என்றும் உறுதியாக வலியுறுத்தி உள்ளனர். அதாவது ராமர் மற்றும் அனுமன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஆதிபுருஷ் படம் அமைந்துள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்துக்கள், சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் ஆதிபுருஷ் படத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாகவும், ஆதிபுருஷ் இயக்குநர் ஓம் ராவத் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தினர் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயமானது ஆதிபுருஷ் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!