கோலிவுட் படங்களை இந்தியளவில் பேச வைத்த பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குநர் ஷங்கர். இவரின் இந்தியன், எந்திரன் போன்ற படங்கள் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் படங்களாகவே பார்க்கப்படுகின்றன.மேலும் இவரது இளைய மகள் அதிதி, தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் அவரைப் பற்றிய பேச்சு தான்.
மேலும் இவர் நடித்த ஒரு படம் கூட இன்னும் ரிலீஸ் ஆகாத போதும், தற்போதே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.அத்தோடு அந்த அளவுக்கு கோலிவுட்டின் சென்ஷேசனாக உருவெடுத்துள்ளார் அதிதி. இவர் நடித்துள்ள விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில் படு பிசியாக உள்ளார் அதிதி.
இவர் நடித்துள்ள விருமன் படம் ரிலீசாகும் முன்பே அடுத்த படத்தில் கமிட்டாகிவிட்டார் அதிதி. அதன்படி மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகவுள்ள மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளார் அதிதி. இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாவீரன் படத்துக்காக நடிகை அதிதி வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க அவர் ரூ.25 லட்சம் சம்பளமாக வாங்கி உள்ளாராம்.
அத்தோடு அறிமுக நடிகை ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
மறுபுறம் இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் அவருக்கு இவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுந்து வருகின்றது. சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகைகள் சிலருக்கு கூட இந்த அளவு சம்பளம் வழங்கப்படாத நிலையில் இரண்டாவது படத்திலேயே அதிதி இந்த அளவு சம்பளம் பெற்றுள்ளது எப்படி.இது ஷங்கருக்கா இல்லாவிடில் ஷங்கர் மகளுக்கா என கேட்டு வருகின்றார்கள்.
Listen News!