தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அதிதி ஷங்கர். இவர் இயக்குநர் ஷங்கரின் இளையமகள் ஆவார். சமீபத்தில் வெளிவந்த கார்த்தியின் 'விருமன்' படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
முதல் படமே இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பட்டித்தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் வந்து குவிகின்றன. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படங்களை தாண்டி சமூக வலைத்தளங்களிலும் பொழுதைக் கழித்து வரும் அதிதி ஷங்கர் அடிக்கடி போட்டோஷூட்களை நடத்தி வருகின்றார்.
அந்தவகையில் தற்போதும் பாவாடை தாவணி அணிந்து பட்டாம்பூச்சி போன்று போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் 'அச்சு அசல் தேவதை போலவே இருக்கீங்களே" எனக் கூறி வருகின்றனர்.
Listen News!