தமிழ் சினிமாவில் காலத்திற்கு காலம் பல்வேறு நடிகர், நடிகைகளும் அறிமுகமான வண்ணம் தான் இருக்கின்றனர். அந்தவகையில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான ஷங்கரின் இளைய மகளான அதிதியும் தற்போது சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். அவர் நடிப்பில் உருவான முதல் படம் 'விருமன்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். முத்தையா இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.
மேலும் 'விருமன்' திரைப்படமானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகின்றது. இப்படம் ரிலீசான முதல் நாளே ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து வசூலை வாரிக் குவித்து வெற்றி நடை போட்டு வருகின்றது.
இந்நிலையில் அறிமுக நடிகையான அதிதிக்கும் அதிர்ஷ்டமான படமாக இது அமைந்திருக்கின்றது. இப்படத்தின் அதிதியின் நடிப்புக்கும், நடனத்துக்கும் பல பிரபலங்களிடமிருந்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணமே உள்ளன. அதுமட்டுமன்றி முதல் படத்திலேயே அவருக்கென ரசிகர் கூட்டம் உருவாகி ரசிகர் மன்றம் தொடங்கிய நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன.
இவ்வாறான பாராட்டுக்களுக்கு மத்தியில் ஷங்கரின் மகள் அதிதியை தான் காதலிப்பதாக கூறி நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமன்றி படத்தில் காதலை சேர்த்துவைப்பது போல் தனது காதலையும் சேர்த்து வைக்குமாறு இயக்குநர் ஷங்கருக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஷங்கர் மகள் அதிதியை காதலிப்பதாக கூறியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அத்தோடு "அதிதி தனக்கு தங்கச்சி மாதிரி" எனவும் கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரை கமெண்டுகளால் கிண்டலடித்து கேலி செய்து வருகின்றனர். அதாவது "என்ன தல இந்த முறை அடி பலமோ" என சமூக வலைதளங்களில் அவரை ட்ரோல் செய்தும் வருகின்றனர். இவ்விடயமானது தற்போது அதிகளவில் பகிரப்பட்டும் வருகின்றது.
Listen News!