• Nov 19 2024

லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் அதிதி ராவ் மற்றும் சித்தார்த்-மும்பையில் ஒன்றாக சுற்றும் ஜோடியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கன்னத்தின் முத்தமிட்டாள்' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து, தன்னுடைய சினிமா கேரியரை ஆரம்பித்தவர் தான் நடிகர் சித்தார்த்.இதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.


இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பதை தவிர்த்து, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து, மிகவும் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.  


தமிழ் மொழி மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வரும் இவர் மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது அந்த படத்தின் நாயகியான அதிதி ராவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது.


இதை தொடர்ந்து, லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கிறார்கள். மும்பையில் இருவரும் ஒரு இடத்தில் இருந்து ஒன்றாக வெளியே வந்து அவரவர் காரில் தனித்தனியாக ஏறி செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.


ஏற்கனவே சித்தார்த் கடந்த 2003 ஆம் ஆண்டு மேகனா என்பாரை திருமணம் செய்து கொண்டு 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து, ஸ்ருதி ஹாசன் மற்றும் சமந்தா போன்ற நடிகைகளின் காதல் சர்ச்சையில் சிக்கிய பின்னர் அதிதி ராவின் காதல் உறவில் இருந்து வருகிறார். இந்த காதல் திருமணம் வரை செல்லுமா? என ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement