தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பெண் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை அதிதி ஷங்கர். இவர் 2022 ஆம் ஆண்டு வெளியான 'விருமன்' படத்தின் மூலமாக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்தினை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான ஷங்கரின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்.
இவ்வாறாக தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறி வருகின்ற அதிதி ஷங்கர் படங்களைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர். அதில் அவ்வப்போது போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.
அந்த வகையில் தற்போதும் பச்சை நிறத்தில் உடையணிந்து மயில் போல் மின்னும் அழகில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் அதிதி ஷங்கர். இவருடைய இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
Listen News!