• Sep 21 2024

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்.. அதுவும் இவருடைய இயக்கத்திலா? வேற லெவல் கூட்டணி ஆச்சே..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் அதிதி ஷங்கர். முதல் படமே இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.மேலும் அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் கதாநாயகியாக அதிதி ஷங்கர் தான் நடிக்க போகிறார் என தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கர் கமிட்டாகியுள்ளாராம்.

இப்படம் ராம் குமார் இயக்கப்போகிறார். இதற்க்கு முன் ராம் குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் வெளிவந்த முண்டாசுப்பட்டி, ராட்சசன் இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தில் தான் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement