தமிழ் சினிமாவில் பிரமாண்டமா இயக்குநராக வலம் வருபவர் தான் ஷங்கர். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகின்றார். இவருடைய இரணடாவது மகள் தான் அதிதி ஷங்கர். இவர் எம்பிபிஎஸ் படிப்பையும் முடித்த பின் விருமன் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.பன்முகத் தன்மை கொண்ட அதிதி தன்னுடைய முதல் படமான விருமன் படத்தில் இருந்து மதுரவீர அழகுல என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி வைரலானது.
இப்பாடலை முதலில் பாடியது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜலட்சுமி தான்.பின்னர் அதிதி சங்கரும் விருப்பப்பட்டு இந்த பாடலை பாடி, இவர் குரலில் தான் விருமன் பாடல் இடம் பெற்றது. இதனால் ராஜலட்சுமி பெரிதும் வருத்தப்பட்டு பேசினார்.இதே சம்பவம் தான் மாவீரன் படத்திலும் இடம் பெற்றது.
அதாவது வண்ணாரப்பேட்டையில் என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியிருந்தார்.குட் நைட் போன்ற சில படங்களில் பாடியுள்ள மீனாட்சி இளையராஜா சிவகார்த்திகேயன் படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சியில் இருந்தாராம். கடைசியில் அவர் குரலில் இந்த பாடல் இடம்பெறவில்லை என்பது அவருக்கு வருத்தமாக இருந்தது என கூறியிருக்கிறார்.
இதை அறிந்த ரசிகர்கள் தொடர்ந்து ஏழையின் வயிற்றெரிச்சலை அதிதி சங்கர் கொட்டிக் கொள்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!