தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக விளங்கி வருபவர் இயக்குநர் சங்கர். 2.0 படத்திற்கு பிறகு பிரம்மாண்ட முறையில் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் 15 வது படத்தினை இயக்கி வருகிறார்.
தற்போது இரு படங்களிலும் ஒரே நேரத்தில் பணியாற்றி வருகிறார். அதேசமயம் தன் மகள் அதிதி சங்கரை சினிமாவில் அறிமுகபடுத்தியும் வைத்தார்.மருத்துவம் படித்து பட்டம் எல்லாம் வாங்கிய நிலையில், தமிழ் சினிமாவில் அதிரடியாக ஹீரோயினாக கடந்த ஆண்டு களமிறங்கினார்.
இவரின் முதல் படமான விருமன் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக நடித்த அதிதி அப்படம் வெளியாகும் முன்பே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
இப்படத்தினை தொடர்ந்து போட்டோஷூட் பக்கம் சென்று கிளாமர் லுக்கிலும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் நெஞ்சங்களைக் கவர்ந்தார்.
சமீபத்தில் குடும்பத்துடன் வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாடியிருந்தார் அதிதி. சமீபத்தில் பனிப்பிரதேசத்தில் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி ரசனைக்கு உள்ளாகி இருக்கிறது .
Listen News!