• Nov 10 2024

ராம் செய்த வேலையால் சண்டையில் சிக்கிக் கொண்ட ஜனனி-நெட்டிசன்களிடம் சிக்கி தவிக்கும் ADK..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்,  டோலிவுட், கோலிவுட் என 3 மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி  விறுவிறுப்பாக  ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் தற்போது 6வது சீசன் ஒளிபரப்பாகிறது, 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி சிலரின் வெளியேற்றத்துடன் நகர்ந்து செல்கின்றது.

இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். இந்த வாரம் கமல்ஹாசன் அவர்கள் இடம்பெறும் வாரம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது என்பது தெரிகிறது.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரமோவில் ஜனனிக்கும் ADK விற்கும் வாக்குவாதம் ஒன்று இடம்பெறுகின்றது.

அதாவது பிக்பாஸ் ஜனனியிடம் வீட்டில் யார் முகமூடி போட்டுக் கொண்டு இருக்கிறார் என கேட்க அதற்கு அவர் உடனே ADK  என சொல்லிவிடுகிறார் ஜனனி. இதைக்கேட்ட அவர் உங்கள் மீது எனக்கு தனி அக்கறை இருந்தது, அதை கொச்சைப்படுத்திவிட்டீர்கள், இந்த வீட்டில் யார் மீதும் இல்லாத பாசம் உங்கள் மீது இருந்தது.நீங்கள் எனக்கு தங்கச்சி மாதிரி ஆனால் இப்படி செய்து விட்டீர்கள்.அதோடு ராமிற்கும் போய் நான் தான் இந்த வாரம் வீட்டை விட்டு போயிடுவேன் எனக் கூறிப் பேசினார் ஜனனி  எனக் கண்கலங்கினார் ADK.



அத்தோடு ஜனனி பேசியதற்கு மட்டும் இவர்  கத்தி அண்ணன் தங்கை றாமா போடுகிறார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள் .இவரை சொன்னதற்கு மட்டும் கோவம் வருகின்றது.ஆனால் இவர் ஜனனியை மட்டும் எப்படி நோமினேட் செய்வார்.வெளியில் அண்ணன் தங்கை பாசம் மாதிரி நடிக்கிறார்.எனக் கூறி நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள்.டேய் ADK நீ ஜனனியை போனவாலரம் நாமினேட்ட பண்ணின பிறகு மிக்ஸர் கொடுத்த அதை பத்தி எல்லாருகிட்டயும் புறம் பேசினா..அப்புறம் அது நீ முகமூடி போட்டிருக்கிற என்று சொன்ன பொத்திக்கிட்டு வருதா என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.



 வேணும் என்று ஜனனி பேசவில்லை என்றும் வீடியோ ஆதாரங்கள் மூலம் கூறி வருகிறார்கள்.அதாவது ராம் ஜனனியிடம் சென்று இந்த வாரம் நான் வீட்டை விட்டு போயிடுவேனா இல்லை ADK யா என்று கேட்டதற்கே அவர் பதிலளித்துள்ளார்.அதாவது ராம் வந்து கேட்கும் போது அவரின் மனம் நோகாமல் ADK யை கூறியதாக விக்ரமனிடம் கூறியுள்ளார்.இதில் ஜனனியில் எந்த பிழையும் இல்லை. ADK நடிக்கின்றார் எனக் கூறியுள்ளார்.






Advertisement

Advertisement