கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது 'ருத்ரன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாகிறது. இதில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தினுடைய இசை வெளியீட்டு விழா ஆனது சமீபத்தில் பிரமாண்டமாக வெளியானது. இந்த இசை வெளியீட்டு விழாவில், ராகவா லாரன்ஸ் உட்பட ருத்ரன் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை விஜய் டிவி பாலா தொகுத்து வழங்கி இருந்தார்.
அந்த சமயத்தில் தனது தாயாரை மேடைக்கு அழைத்த ராகவா லாரன்ஸ், பாலாவிற்கு 10 லட்சம் நன்கொடை வழங்கினார். அதாவது பாலா தனது சொந்த செலவில் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். அதற்காக ராகவா லாரன்ஸும் பாலாவிற்கு இந்த நிதி உதவியை வழங்கி உள்ளார்.
மேலும் தொடர்ந்து லாரன்ஸ் மேடையில் பேசுகையில், தான் 150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி வழங்கவிருப்பதாகவும் அறிவித்தார். அதுமட்டுமல்லாது இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆசி வேண்டும் எனவும் அவர் டிவீட் செய்திருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதாவது "நல்ல படம் குடுங்க அது போதும், இப்படி நல்ல விஷயங்கள 'Cover up'-ஆக பயன்படுத்தாதீங்க" என கூறி லாரன்ஸை சாட்டியுள்ளனர். மேலும் படங்கள் வெளியாகும் போது இப்படி அறிவிப்பது தனக்கு தானே ப்ரொமோஷன் செய்துகொள்வதை போல உள்ளது.
நீங்கள் உண்மையாகவே உதவி செய்ய வேண்டும் என நினைத்துவிட்டால் அதனை மறைமுகமாகவே செய்யலாம். இப்படி தேவையில்லாமல் அந்த குழந்தைகளை மேடையில் ஏற்றி அவர்களுக்கு உதவுகிறேன் என்பது சுத்த விளம்பரமே என பலவாறு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Listen News!