தமிழ் சினிமாவில் அடுத்துடுத்து ஹிட் படங்களைக் கொடுக்கும் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் நடிகர் சூர்யா. இவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் மட்டுமல்ல கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்களும் செம ஹிட்டாகி வருகின்றன. இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகரித்துக் காணப்படுகின்றது.
இவரை ஆக்ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்தியது டைரக்டர் பாலா இயக்கிய நந்தா படம் தான்.இப்படம் இவரின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு பிறகு பிதாமகன், காக்க காக்க, பேரழகன், வேல், சிங்கம் போன்ற படங்கள் சூர்யாவிற்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தன.
அத்தோடு இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று போன்ற திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகினாலும் சர்வதேச லெவலில் இவரைப் பிரபல்யப்படுத்தியது.அதிலும் சூரரைப் போற்று படம் 35க்கும் அதிகமான சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
கமலின் விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்த ரோலக்ஸ் கேரக்டரை தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் விக்ரம் 3, கைதி 2, வாடிவாசல், வணங்கான் என வரிசையாக சூர்யா படங்கள் ரசிகர்களின் ஆர்வத்தை பட மடங்காக அதிகரிக்க வைத்து வருகிறது.
இந்நிலையில் ஜுலை 23 ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் பல விதங்களில் பிளான் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று சூர்யா பிறந்தநாள் காமன் டிபியை பிரபலங்கள் பலர் ஒன்றிணைந்து வெளியிட்டனர்.
சூர்யா பிறந்தநாள் ட்ரீட்டாக வாடிவாசல், சூர்யா 42 படங்களின் அப்டேட்கள் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களை தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் உள்ள தியேட்டர்களில் ஜுலை 22 முதல் ஜுலை 24 வரை இந்த படங்களை ரீ ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படங்களை தியேட்டர்களில் பார்த்தால் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக, புது அனுபவமாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்
- விஜய் சேதுபதியின் படத்திற்கு இசையமைப்பாளரின் பெயரை வைத்த படக்குழுவினர்…அவரையும் விட்டு வைக்கலயா?..கிண்டலடிக்கும் ரசிகர்கள்..!
- ஷாருக்கான்-டாப்ஸி இணைந்து நடிக்கும் புதிய படம்…ஷூட்டிங் எந்த இடத்தில தெரியுமா…இப்பிடி ஒரு பிளான் பண்ணி இருக்காங்களே..!
- ‘கோல்ட் டிக்கட்’ எனக் கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்த சுஷ்மிதா சென்…!
- சாதனை படைத்த நடிகர் மாதவனின் மகன்… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…வைரலாகும் வீடியோ…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!