• Nov 14 2024

அட்ராசக்க..! சூர்யாவின் ‘சிங்கம்’ மாதிரி மாஸ் படம் பண்ணவிருக்கும் வெற்றிமாறன்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தில் பணிபுரிந்து, நடித்தவரும், டாணாக்காரன் திரைப்படத்தின் இயக்குநருமான தமிழரச யூடியூப் சேனல் ஒன்றுக்கு பிரத்தியேக பேட்டியை அளித்துள்ளார்.

இந்த பேட்டியில் வெற்றிமாறன் பார்வையில் போலீஸ்காரர்கள் குறித்த கருத்துகளை பேட்டியாளர் முன்வைக்கிறார். குறிப்பாக வெற்றிமாறன் திரைப்படங்களில் போலீஸ்காரர்கள் யாரோ ஒரு தரப்பினருக்கு சாதகமாகவும் பெரிதாக தவறுகளை தட்டிக் கேட்பதற்கு வலுவற்ற சூழலில் இருப்பதாகவும் காட்டப்படுகிறது. இப்படியான போலீஸ் கதாபாத்திரங்களை வெற்றிமாறன் திரைப்படங்களில் காண முடிகிறது. இது பற்றி இயக்குநர் மற்றும் நடிகர் தமிழரசனிடம் கேட்கப்பட்டது.

\

அப்போது பேசிய தமிழரசன்,“அப்படி இல்லை, எப்போதுமே மக்கள் பக்கம் நிற்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் அத்தனை பேருமே போலீசை எதிர் நிலையில் வைத்துதான் காட்டுவார்கள். நீங்கள் காவல்துறைக்கு சப்போர்ட் செய்தால் மக்கள் பக்கம் நிற்க முடியாது. இதில் போலீஸ்காரர்களையும் தவறு சொல்ல முடியாது. ஏனென்றால் போலீஸ்காரர்கள் ஒரு அமைப்புக்குள் இருக்கிறார்கள். அவர்கள் சுயமாக முடிவெடுக்கக்கூடிய சூழலில் இல்லை. அவர்களுக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பில் யார் அவர்களை வேலைக்கு பணிக்கிறார்களோ அந்த பணியை அவர்கள் செய்ய முடியும், செய்கிறார்கள்.

ஆனால் இயக்குநர் வெற்றிமாறன் அதை எப்போதுமே பேலன்ஸ் செய்வார். போலீஸ் தரப்பில் இருக்கும் சரி & பிழைகள்  இரண்டையுமே காட்டுவார். விடுதலை திரைப்படம் முடிக்கும் போதெல்லாம் வெற்றிமாறன் அண்ணன் சொன்னது என்னவென்றால் அடுத்தது சிங்கம் மாதிரி ஒரு கஜ கமர்சியலாக ஒரு போலீஸ் திரைப்படம் பண்ண வேண்டும் என குறிப்பிட்டார். 

அந்த திரைப்படத்தில் போலீசாரை மாஸாக காட்டுவதாகச் சொன்னார்.  போலீசாரை பற்றிய விமர்சன படமாக விடுதலைதான் கடைசி படமாக இருக்கும் என்றும் ஒரு சமயத்தில் கூறினார். போலீசை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து கமர்சியலாக ஒரு படம் பண்ண வேண்டும் விடுதலை திரைப்பட பணியின் போது ஒரு பத்து முறையாவது என்னிடம் சொல்லி இருப்பார்” என்று குறிப்பிட்டார்.



Advertisement

Advertisement