'ராட்சசன்' பட பாணியில், வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதைகளத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் 'போர் தொழில்'. இந்த படத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவருமே கதையின் நாயகர்களாக நடித்திருந்தனர். நிகிலா விமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கியிருந்தார். படம் முழுக்க பரபரப்பு மற்றும் விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியாகி, இரண்டு வாரங்களை கடந்தும் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியது.
சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இப்படம் தமிழ் நாட்டை தாண்டி கேரளாவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் 20 நாட்களில் போர் தொழில் படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் ரூ 32 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அசோக் செல்வன் சமீப காலமாக, தொடர்ந்து தரமான கதை களம் கொண்ட படங்களை தான் அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில், இவர் நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படத்தின், வெற்றிக்கு பின்னர், 'போர் தொழில்' திரைப்படம் தாறுமாறான வெற்றி பெற்றுள்ளதோடு, இப்படத்தின் மூலம் நடிகர் சரத் குமாருக்கு நிகரான தரமான நடிப்பை அசோக் செல்வன் வெளிப்படுத்தியது பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!