பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம்கோபால் வர்மா 37 ஆண்டுகளுக்குப் பின் கல்லூரி பட்டம் பெற்றதாக பதிவிட்டுள்ள புகைப்படம் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவில், நான் தேர்ச்சி பெற்று 37 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று எனது பி டெக் பட்டம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1985 ஆம் ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் படிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லாததால் அதனை எடுக்கவில்லையென தெரிவித்து தான் படித்த ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழகத்திற்கு நன்றி கூறியுள்ளார்.
அத்தோடு இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள ராம் கோபால் வர்மாவை பலரும் பாராட்டியுள்ள நிலையில், சிலர் கடுமையாக கேலி செய்துள்ளனர்.
1989 ஆம் ஆண்டு நாகார்ஜூனா நடித்த சிவா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் ராம் கோபால் வர்மா. தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள அவர் சர்ச்சைக்குரிய இயக்குநர் என பெயரெடுத்தவர். அத்தோடு இந்தியில் ராம் கோபால் வர்மா இயக்கிய ரங்கீலா, சத்யா உள்ளிட்ட படங்கள் தமிழ்நாட்டில் சூப்பர் ஹிட்டாக படமாக அமைந்தது. மேலும் சர்கார், சர்கார் ராஜ், கம்பெனி, நிஷாப்த், ஆக், டிபார்ட்மென்ட், ரத்த சரித்ரா மற்றும் நாச் உள்ளிட்டவை அவரது இயக்கத்தில் வெளியான மிக முக்கியமான திரைப்படங்களாகும்.
இயக்கம் மட்டுமின்றி பல படங்களில் தயாரிப்பாளராகவும் அவர் மாறியுள்ளார். அத்தோடு 2019 ஆம் ஆண்டு கோப்ரா படத்தின் மூலம் நடிகராகவும் ராம் கோபால் அறிமுகமானார். அடிக்கடி சர்ச்சையாகவும் பேசி சிக்கும் அவர் கடந்தாண்டு நைனா கங்குலி, அப்சரா ராணி, ராஜ்பால் யாதவ், மிதுன் புரதாரே உள்ளிட்ட பலரையும் வைத்து Dangerous என்ற படத்தை இயக்கியிருந்தார்.
அத்தோடு தன் பாலின ஈர்ப்பு காதலை மையமாக வைத்து பெண்களை முதன்மை கேரக்டரில் நடிக்க வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. படத்தில் இடம்பெற்ற ஆபாச காட்சிகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
Listen News!