தமிழ் சினிமாவில் குறும்படங்களில் நடித்து வந்தவர் தான் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இதன் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றுக் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் லவ் டுடே.இப்படத்தை இவர் இயக்கியிருந்ததோடு இவரே அதில் நடித்திருந்தார்.இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். நேற்று வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது
இளைஞர்கள் மட்டும்மின்றி குடும்ப ரசிகர்களை கவர்ந்த லவ் டுடே திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.இது விமர்சன ரீதியாகவும் மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சக்கப்போடு போடுகிறது.
இவ்வாறுஇருக்கையில் , இப்படம் வெளிவந்து 9 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.
Listen News!