இயக்குநர் மார செல்வராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில், லால் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் மாமன்னன்.பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து மாமன்னன் மூலம் தனது மூன்றாவது வெற்றி படத்தை மாரி கொடுத்துள்ளார்.
இந்த வெற்றிக்கு பரிசாக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு புதிய கார் ஒன்றை உதயநிதி வழங்கினார்.தொடர்ந்து தமிழகத்திலும், உலகளவில் வசூல் வேட்டை நடத்தி வரும் மாமன்னன் கடந்த 9 நாட்களில் உலகளவில் ரூ. 54 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மேலும், தமிழகத்தில் மட்டுமே ரூ. 41 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இதுவே உதயநிதியின் கெரியரில் தி பெஸ்ட் கலெக்ஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுவே உதயநிதியின் இறுதித்த திரைப்படமாகும். இப்படத்தின் நடிக்க ஆரம்பித்த போதே உதயநிதி சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்திருந்தார். அதனை தற்பொழுது நிஜமாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!