• Nov 10 2024

9 ஆண்டுகளுக்கு பின் தாய் தந்தையான சரவணன் மீனாட்சி செந்தில் ..என்ன குழந்தை தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை  அனைவருக்கும் பிடித்த சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.

இதனுடைய முதல் சீசனில் கதாநாயகன் - கதாநாயகியாக நடித்தவர்கள் டான் செந்தில் - ஸ்ரீஜா.


இவர்கள் இருவரும் இணைந்து மாப்பிள்ளை என்ற சீரியலிலும் ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்கள்.

அத்தோடு கடந்த 2014ஆம் ஆண்டு இவ்விருவரும் காதலித்து திருமணமும் செய்துகொண்டனர். சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என செந்தில் கூறியிருந்தார்.


இவ்வாறுஇருக்கையில், 9 ஆண்டுகளுக்கு பின் செந்தில் - ஸ்ரீஜா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை செந்தில் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரபலங்கள் செந்தில் - ஸ்ரீஜா ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.




Advertisement

Advertisement