• Nov 10 2024

நீண்ட நாளுக்கு பிறகு கணவருடன் ஹோம்லி லுக்கில் போஸ் கொடுத்த நிக்கி கல்ராணி- சூப்பர் ஜோடியாக இருக்கிறாங்களே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'மிருகம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆதி. தன்னுடைய முதல் படத்திலேயே மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். 


விமர்சனம் ரீதியாக இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை குவித்தது. இதை தொடர்ந்து, ஈரம், ஆரவான், கோச்சடையான், என ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பால், தொடர்ந்து வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.


 அண்மையில் கூட இவர், இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் வெளியான 'தி வாரியர்' படத்தில், வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் ஆதி, சமீபத்தில் நிக்கி கல்ராணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


திருமணமான பின்பும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு தங்களுடைய புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது தனது கணவருடன் இணைந்து கொண்டாட்ட நிகழ்வு ஒன்றிற்குச் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement