தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஒரே நடிகர் என்றால் அது விஜய்தேவர் கொண்டா தான். ‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக மாறிய இவர், ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.
தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததையடுத்து அவருக்கு பெண்களின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. பின தமிழ் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.இவர் நடிகை ராஷ்மிகாவுடன் ரிலேஷன்சிப்பில் இருப்பதாகவும் இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் தீபாவளித் திருநாளை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். எனவே விஜய் தேவர்கொண்டா சீதா ராமம் திரைப்பட நடிகைமிருணாளினி தகூருடன் இணந்து பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளார்.
இதனால் பலரும் என்ன சேர் ராஷ்மிகாவுடன் பிரேக்கப் ஆகிடுச்சா என்று கேட்டு வருகின்றனர். ஆனாலும் இதுவும் உண்மைத் தகவலா என்று தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!