சின்னத்திரையில் நிகழ்ச்சி இயக்குநராக இருந்து நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்கநராக அறிமுகமாகியவர் தான் நெல்சன் திலீப்குமார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. இதனை அடுத்து சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து டாக்டர் எனும் வெற்றிப்படத்தை கொடுத்தார்.
இதன்பின் தளபதி விஜய்யுடன் இணைந்த நெல்சன் பீஸ்ட் படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இதனால் பல விமர்சனங்களையும் சந்தித்தார். இதனை அடுத்து ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.
இப்படத்தின் மூலம் நெல்சன் கம்பேக் கொடுத்துளளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்திலையில் ஜெயிலர் படத்திற்கு பின் நெல்சன் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என தகவல் வெளியாகவில்லை. ஆனால், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்திற்கு உருவாகவிருக்கும் அஜித் 63 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்சன் விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!