• Sep 20 2024

பல மாதங்கள் கடந்த தங்கலான் லுக்.. புது தோற்றத்தில் ஆளை அசத்தும் விக்ரம்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தங்கலான். இப்படத்தில் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.ஒகேனக்கல் பகுதியில் தொடங்கிய தங்கலான் ஷூட்டிங் பல்வேறு பகுதிகளில் நடந்தது.

 அதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் மதுரையில் பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் நடந்தது. படத்தின் ஷுட்டிங் முடிவடைந்துள்ளதாக அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருந்தது.அத்தோடு படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என நம்பப்படுகின்றது.


இந்நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது சின்ன பட்ஜெட் படமாகத்தான் திட்டமிட்டார்களாம். ஆனால் ஷூட்டிங் செல்ல செல்ல கதையின் தேவைக்காக பட்ஜெட் அதிகரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி ஷூட்டிங் முடியும்போது தங்கலான் பட்ஜெட் 100 கோடி ரூபாயை தொட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


 இது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் பா.இரஞ்சித் எப்போதும் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர். ஆனால் அவர் இப்படி பட்ஜெட்டை இழுத்துவிட்டாரே என கூறிவருகின்றனர். அதேசமயம் கதைக்கு தேவைப்பட்டிருக்கும் அதனால்தான் பா.இரஞ்சித் இந்த அளவுக்கு பட்ஜெட்டை இழுத்திருப்பார் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


இப்படியான நிலையில் தங்கலான் படத்திற்காக விக்ரம் போட்ட புதிய கெட்டப் போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement