தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு அடுத்ததாக ஏராளமாள ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியாகிய டான் மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.
இதனால் இவருடைய படங்களுக்கா எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இவ்வாறாக மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியான திரைப்படம் தான் பிரின்ஸ். தெலுங்கு இயக்குநரான அனுதீப் குமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அத்தோடு இவருடைய கரியரிலையே இதுவே மோசமான படம் என ரசிகர்கள் திட்டித் தீர்த்தும் வந்தனர்.
இருப்பினும் இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் பிரின்ஸ் படம் நல்ல லாபத்தைப் பெற்றதாக அண்மையில் வெற்றி விழா கொண்டாடி இருந்தனர்.இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு தான் வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ. 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!