• Sep 20 2024

தளபதி விஜய்யைத் தொடர்ந்து சாதனை படைத்த பாகுபலி பிரபாஸ்! ...எதில் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் பிரபாஸ். இவர் இதன்பின் நடித்த சாஹா மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது ஆதி புருஷ், சலார், பாரஜெக்ட் கே ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமான பிரஷாந்த் நீல் இயக்கி வரும் திரைப்படம் தான் சலார்.

இந்நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு உரிமம் தென்னிந்திய அளவில் இதுவரை எந்த ஒரு நடிகரின் படமும் விற்பனை ஆகாத விலைக்கு விற்றுப்போகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட ரூ. 90 கோடிக்கும் மேல் தான் இப்படத்தின் வெளிநாட்டு உரிமம் விற்றுள்ளார்களாம்.இதை வைத்து பார்க்கும் பொழுது இதுவரை தென்னிந்திய அளவில் யாருடைய படமும் இந்த அளவிற்கு வெளிநாட்டில் விற்பனை ஆகவில்லை என கூறுகின்றனர்.


Advertisement

Advertisement