• Sep 20 2024

’வணங்கான்’ படத்தில் நடிப்பில் மிரட்டிய அருண் விஜய்.. 3 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த படத்திற்கு விமோசனம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!


தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான ’வணங்கான்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த டீசரில் அருண் விஜய்யின் நடிப்பை பார்த்து பலர் மிரண்டு விட்டனர் என்று சொல்லலாம். சூர்யா கூட தனது நெருக்கமானவர்களிடம் இந்த படத்தை மிஸ் செய்து விட்டேன் என்று வருத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. 

இந்த நிலையில் ’வணங்கான்’ படத்தின் டீசரில் அருண் விஜய்யின் நடிப்பை பார்த்த தயாரிப்பாளர் ஒருவர் அருண் விஜய் நடித்து மூன்று ஆண்டுகளாக முடங்கி இருக்கும்  படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படம் தான் ‘அக்னி சிறகுகள்’



’வணங்கான்’  திரைப்படத்தின் டீசர் வெளியானவுடன் அருண் விஜய்யின் நடிப்பை பார்த்து ‘அக்னி சிறகுகள்’ படத்திற்கு தற்போது வியாபாரம் கிடைத்துள்ளதாகவும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய சில நிறுவனங்கள் முன்வந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

’வணங்கான்’ படம் வெளியானால் அருண் விஜய்க்கு ஒரு நல்ல மார்க்கெட் கிடைக்கும் என்றும் கூறப்படும் நிலையில் ’அக்னி சிறகுகள்’ படத்தையும் சூட்டோடு சூடாக ரிலீஸ் செய்து விடலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி. அருண் விஜய். அக்சரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை நிவின் என்பவர் இயக்கியுள்ளார். ’வணங்கான்’ டீசரால் 3 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த ’அக்னி சிறகுகள்’ படத்திற்கு தற்போது விமோசனம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது

Advertisement

Advertisement