• Sep 21 2024

விக்ரமை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கவுள்ள மாஸ் ஹீரோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக திகழ்பவர் தான் இயக்குநர் பா.ரஞ்சித்.

மேலும் இவர் இயக்கத்தில் வரிசையாக பல மெகா ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

அப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வெளியாகும் முன்பே அவரின் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடந்துள்ளது.

ஆம், அதன்படி சியான் விக்ரம் நடிப்பில் அவர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக சியான் 61 திரைப்படம் உருவாக இருக்கிறது.மேலும் அப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது அதில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையே இயக்குநர் பா.ரஞ்சித் சியான் 61 படத்திற்கு பின் அவர் இயக்கவுள்ள படம் குறித்து கூறியுள்ளார்.

ஆம், அவர் அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கயிருக்கிறாராம். மேலும் அப்படத்திற்கான திரைக்கதையை தற்போது எழுதி வருவதாகவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement