தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இதற்கு முன்பாக, நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்த விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது.
வாரிசு திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கின்றனர். அத்தோடு , இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
எனினும் அதே போல, இந்த திரைப்படத்தின் இரண்டு சிங்கிள்களான ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி பாடல்கள் வெளியாகி தொடர்ந்து ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது. இந்த நிலையில், ரஞ்சிதமே பாடல் குறித்து நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ள கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், Behindwoods TV சேனலில் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்த போது ரஞ்சிதமே பாடலை குறித்து சில கருத்துக்களை பேசி உள்ளார். அப்போது பேசிய ஷோபா சந்திரசேகர், "ஃபுல் சாங் வர்றதுக்கு முன்னாடி அந்த (ரஞ்சிதமே) பாட்டோட ஒரு ப்ரோமோ வந்தது. ரஞ்சிதமே நல்லா ஹை பிட்சில் விஜய் பாடி இருக்காரேன்னு சொல்லிட்டு அடுத்த நாள் விஜய் ஆபீஸ்க்கு அவரை பாக்க போயிருந்தேன். அப்ப அவர் கிட்ட இதுதான் ஸ்டார்டிங்கா இல்ல வேற இருக்கான்னு கேட்டு, ஃபுல் சாங் கேட்கணும்னு சொன்னேன். அத்தோடு நாளைக்கு வர என்னால வெயிட் பண்ண முடியல அப்படின்னு.
அப்புறமா அந்த சாங் போட்டு காமிச்சாரு. வேற ஒரு லைன் முதல்ல வந்தது. மேலும் ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப Catchyஆ இருக்குன்னு சொன்னேன். ரஞ்சிதமே, மனோரஞ்சிதம் பூ மாதிரி ரொம்ப சாஃப்டா, கலர்ஃபுல்லா இருந்துச்சு. விஜய் பாடுன பாட்டுல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இப்ப கேட்டீங்கன்னா நான் இந்த பாட்ட தான் சொல்லுவேன். ஏன்னா எப்ப எல்லாம் தோணுதோ அப்ப எல்லாம் இந்த சாங் நான் கேட்டுட்டு இருக்கேன். கூட பாடுன மானசியும் ரொம்ப நாளா பாடி இருக்காங்க. அத்தோடு அந்த சாங் எடுத்தது ரொம்ப நல்லா இருந்துச்சு. அத பாடகர்கள் வெச்சு ஷூட் பண்ணதும் அழகா பண்ணியிருந்தாங்க. அந்த மெலடி தமன் தம்பி ரொம்ப அழகா விஜய்க்காக போட்டு இருக்காரு.
விஜய் ஹை பிட்ச்ல பாடுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். மேலும் அது ரொம்ப Rare. எப்பவுமே ஒரு பேஸ் பாடல்கள் தான் செலக்ட் பண்ணுவாரு. ஆனா சச்சின், ஜில்லா படத்துக்கு அப்புறம் இந்த படத்தில் ஒரு ஹை பிட்ச் பாட்டு பாடி இருக்காரு. விஜய்யோட வாய்ஸ் எல்லாருமே ரசிச்சு இருப்பீங்க. எனக்கு விஜய் ஓட தமிழ் உச்சரிப்பு ரொம்ப பிடிக்கும். அதனால ரஞ்சிதமே எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு" என ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Listen News!