• Sep 21 2024

அஜித் - விஜய் இருவருடனும் நடித்துள்ள ஏஜென்ட் டினா-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். தீவிர கமலின் ரசிகரான லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக அவருடன் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மேலும் விக்ரம் திரைப்படம் தமிழகத்தை தவிற மற்ற மாநிலங்களிலும் பெரிய வசூலை குவித்து வருகிறது. இதனால் விக்ரம் திரைப்படம் பான் இந்தியளவில் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் படம் மூலம் பிரபலமாகியுள்ள கதாபாத்திரம் ஏஜென்ட் டினா, ஒரே ஒரு சண்டை காட்சியில் வந்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். அத்தோடு டினாவாக நடித்த வசந்தி நடன குழுவை சேர்ந்தவர்.

அவர் விஜய்யுடன் பகவதி, அஜித்துடன் வில்லன் படத்திலும் நடனமாடி இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் தான் இணையத்தில் செம வைரலாகி இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement