தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமானவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடனம் மட்டும் அன்றி நடிப்பு இயக்கம் என பல திறமை கொண்டவராக சினிமாவை கலக்கி வருகின்றார்,
தற்போது நடிகர் பிரபுதேவா, இயக்குநர் ராகவன் இயக்கத்தில் மை டியர் பூதம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இவர் மஞ்சப்பை படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.ரமேஷ் பிள்ளை தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.அந்தவகையில், இந்தப்படத்தின் ரிலீஸ் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது இந்தப் படத்தில் இடம்பெற்ற "எனக்கு மட்டும் ஏன் ஏன்" என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை தற்போது ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரபுதேவா மற்றும் அஸ்வந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். குழந்தைகளை கவரும் மாயாஜால படமாக இப்படம் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தத் திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாக உள்ளது இந்நிலையில் ரிலீசுக்கு முன்பதாகவே இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் லாபம் பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்கில் வெளியாகி கிடைக்கும் வருவாய் கூடும் தான் என்று சொல்லப்படுகிறது.
பிற செய்திகள்
- திருமணம் முடிந்த கையோடு ஸ்ராட் மியூசிக் அஜய் கிருஷ்ணா எடுத்த திடீர் முடிவு
- மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகை ரச்சிதாவின் கணவர்-அதுவும் எந்த டிவியில் தெரியுமா?
- பத்திரிகையாளர் சந்திப்பில் கதறி அழுத பிரபல நடிகை- ஆறுதல் படுத்திய சாய்பல்லவி
- கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் சீரியலின் நேரம் மாற்றப்பட்டதற்கு இந்த சீரியல் தான் காரணமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!