• Sep 20 2024

ஐஷுக்கு மாப்பிளை தேவை... நல்ல பொண்ணு கோபம் வந்தா கொஞ்சம் கடுகு... ஐஷுக்கு ப்ரோக்கர் வேலை பார்க்கும் கூல் சுரேஷ்..

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அடுத்த எபிசோட் வீடியோவில் கூல் சுரேஷ், மற்றும் ஐஷு இருவரும் கேமரா முன் நின்று காமெடியாக பேசி கொண்டு இருக்கிறார்கள். அதில் ஐஷுக்கு கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசை அதற்கு தகுந்த மாப்பிளை தேவை என்று கூல் சுரேஷ்  கூறுகிறார்.


ஐஷு நான் எப்படி பட்ட பொண்ணு என்று சொல்லுங்கள் என்று கூல் சுரேஷிடம் சொல்கிறார். கேமராவை பார்த்து கூல் சுரேஷ் இந்த பெண் உண்மையிலே வாய்பில்லாத பூச்சி என்றுதான் நினைத்தேன் ஆனால் கோபம் வந்தால் கடுக்குமாதிரி பொரிந்து தள்ளுவார்.


சமையலுக்கு காய்கறி வெட்டி தருவார், சாப்பாடு சுவை பார்த்து தருவார், நல்ல மருமகள், நல்ல மனைவி, அழகான மாப்பிளை வேண்டும் என்று கூல் சுரேஷ் கூறுகிறார். மேலும் நான் எல்லாம் பார்த்துக்கொள்வேன் , நானே சம்பாதிக்கிறேன் என்றும் ஐஷு கூறுகிறார்.


பிறகு கூல் சுரேஷ் அவர் ஊரு ஊட்டி கல்யாணம் முடிய  கனிமூன் போகதேவை இல்லை அவங்களோடையே இருக்கலாம் என்று நகைச்சுவையாக கூறுகிறார். இதை பார்க்கும் போது கூல் சுரேஷ் ,ஐஷுக்கு ப்ரோக்கர் வேலை பார்ப்பது போல இருக்கு.  


Advertisement

Advertisement