• Sep 20 2024

ஐஷு இல்லனா பூர்ணிமா.. பிக் பாஸ் வீட்டில் மீண்டும் காதல் லீலைகளில் நிக்சன்?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. 

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் டைட்டில் வின் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளே வந்த நிக்சன் மட்டும், பல நேரங்களில் தன்னுடைய நோக்கத்தை மறந்து தேவையற்ற வேளைகளில் ஈடுபட்டுள்ளார். இதன் பொருட்டு அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர் ரசிகர்கள்.


ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிலிருந்த ஐஷுவுடன் காதல் சேட்டைகளில் ஈடுபட்டு, அவர் ஐஷுக்கு வழங்கிய கண்ணாடி முத்தம் பெரிதளவில் பேசுபொருளாகி, ஐஷுவின் பெற்றோர் நேரே பிக் பாஸ் வீட்டிற்கு வந்தது மட்டும் பெரிய சர்ச்சைகள் உருவானது.

இதையடுத்து, பிக் பாஸ் வீட்டிலிருந்து ஐஷு அதிரடியாக வெளியேறினார். அவர் வெளியேறிய கொஞ்ச நாள் நிக்சன் அழுது கொண்டு கவலையாக காணப்பட்டார்.


இந்த  நிலையில், ஐஷு போனா என்ன நமக்கு தானே பூர்ணிமா, அனன்யா இருக்காங்க என்பது போல மீண்டும் தனது சேட்டைகளை ஆரம்பித்துள்ளார் நிக்சன்.

அதன்படி, பூர்ணிமாவுக்கு சோறு ஊட்டி விடுவது, அனன்யாவுடன் சேட்டை செய்வது என தனது காஜி வேளைகளை காட்டிவருகிறார் நிக்சன். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்ப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement