• Nov 17 2024

47 வயதான தனது ஆண் நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த ஐஸ்வர்யா… அவருடன் 50 கி.மீ பயணம்… வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளே ஐஸ்வர்யா. அதுமட்டுமன்றி முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷின் மனைவியும் கூட. அதாவது இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு தனுஷைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஐஸ்வர்யா திருமணத்துக்கு பின்னர் சினிமாவிலும் இயக்குநராக அறிமுகமானார். அந்த வகையில் முதலாவதாக தனுஷ் நடித்த '3' என்ற படத்தினையே இயக்கியிருக்கின்றார். இப்படமானது வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றுவரையும் ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத்துக்கு சினிமாவில் ஒரு அறிமுகத்தைக் கொடுத்ததும் இதில் வரும் 'ஒய் திஸ் கொலவெறி' என்ற பாடல் தான்.

இப்படத்தினைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடித்த 'வை ராஜா வை' படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. இப்படம் வெற்றியடையாமையால் பின்னர் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். இவ்வாறாக சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ள ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்திருந்தார்.

விவாகரத்துக்கு பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவகாரத்தானாலும் பிட்னஸில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா. அந்தவகையில் வழமை போன்று இன்று காலை தனது ஆண் நண்பருடன் சைக்கிளிங் சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றினையும் இட்டிருக்கின்றார்.

அப்பதிவினூடாக அந்த நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றார். மேலும் இப்பதிவில் "எனது உண்மையான அமைதியான நண்பர், எனது பிட்னஸ் பயணத்தில் பெரும் பாங்காற்றியவர். அவருக்கு இன்று பிறந்தநாள். இன்று 47 வயதாகும் அவர் என்னுடன் சேர்ந்து 50 கிலோமீட்டர் சைக்கிளிங் வந்தார்" வயது அதிகரிக்க அதிகரிக்க கிலோமீட்டரையும் அதிகரிக்க உள்ளதாக ஐஸ்வர்யா அதில் குறிப்பிட்டு உள்ளார்.

ஐஸ்வர்யாவின் இப்பதிவினைப் பார்த்த அவரின் ரசிகர்களும் அந்த ஆண் நண்பருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது இப்பதிவானது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டும் வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement