தமிழ் சினிமாவில் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 2இல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்து முன்னேறினார்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. அதுமட்டுமல்லாது பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு இவருக்கு அதிகமாக கிடைக்கிறது.
இந்நிலையில் சமீபகாலமாக தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வழக்கமாக வைத்து வருகின்ற ஐஸ்வர்யா தத்தா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
Listen News!