• Sep 20 2024

மீனாவுக்கு தான் கான்சர் நோய் என சந்தேகப்படும் அவரது அம்மா- தனத்தின் மீது அக்கறை இருப்பது போல நடிக்கும் ஐஸ்வர்யா- Pandian Stores Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஐஸ்வர்யா முல்லையிடமும் மீனாவும் என்ன பிரச்சினை என்று கேட்டதால் இருவரும் மறைக்காமல் தனம் அக்காவுக்கு தான் மார்புப் புற்று நோய் என்று நடந்ததை எல்லாம் சொல்கின்றனர். இதைக் கேட்ட ஐஸ்வர்யா கதறி கதறி அழுகின்றார். பின்னர் தனத்திடம் சென்று கேட்க தனமும் இவளுக்கு யார் சொன்னது என்று கேட்கின்றார்.


அப்போது மீனா இவள் வற்புறுத்திக் கேட்டதால் தான் சொல்லிட்டோம் அக்கா என்கின்றார். அப்போது ஐஸ்வர்யா, உங்களுக்கு எங்களைப் பார்த்துக் கொள்ளுற பொறுப்பு இருக்கிற மாதிரி தான் அக்கா எங்களுக்கும் உங்களை பார்த்துக்கிற பொறுப்பு இருக்கு, நான் அக்கா அக்கா என்று கூப்பிடுறேன்.ஆனால் நீங்க என்னைத் தங்கச்சியாக நினைக்கல தானே.

எதுக்காக என்கிட்ட இந்த விஷயத்தைப் பற்றிச் சொல்லல என்று கேட்க, தனம் அப்பிடி சொல்லக் கூடாது என்று இல்லை, சொன்னா இப்பிடி பீஸ் பண்ணுவ என்று தான் சொல்லல என்கின்றார். மேலும் நாங்க செக்கப்புக்கு போறோம். நீ வீட்டில இருக்கிறவங்களை மட்டும் சமாளிப்பியா என்று கேட்கின்றார். இதற்கு ஐஸ்வர்யாவும் நான் சமாளிக்கிறேன் நீங்க போய்ட்டு வாங்க என்று அனுப்பி வைக்கின்றார்.


பின்னர் வீட்டில் கண்ணன் ,அண்ணி எல்லாரும் எங்க போய்ட்டாங்க என்று கேட்கின்றார். அதற்கு ஐஸ்வர்யா எல்லாரும் குழந்தைகளை செக்கப்புக்கு கொண்டு போய்ட்டாங்க என்று சமாளிக்கின்றார். இருந்தாலும் தாங்க முடியாமல் கான்சர் நோய் பற்றி பேசி , எங்க வீட்டிலையும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவங்க இருக்கிறாங்க என்று சொல்லுகின்றார். பின்னர் அந்த வீடியோவை அப்லோட் செய்து விடுகின்றார். இந்த வீடியோவைப் பார்த்த மீனாவின் அம்மா, மீனா தான் அடிக்கடி கான்சர் பற்றி பேசிறாள் அவளுக்கு தான் ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ தெரில என ஜனார்த்தனிடம் கூறுகின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


தொடர்ந்து வெளியாகிய ப்ரோமோவில் எல்லோரும் மீனா தனம் முல்லையிடம் சென்று நீ நல்லா இருக்கிறியா என்று கேட்க எல்லோரும் ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்ல மூர்த்தி ஐஸ்வர்யாவைத் திட்டுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement