• Sep 20 2024

அப்படியே அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கின்றாரே- ஒரே வீடியோவில் மில்லியன் கணக்கான போஃலோவர்ஸை பெற்ற இளம் பெண்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 1994ம் ஆண்டு உலக அழகிப்பட்டத்தைப் பெற்று தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய இருவர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஐஸ்வர்யா ராய். இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழில் மட்டுமன்றி ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளனர்.இந்த நிலையில் ஐஸ்வர்யா நீண்ட நாட்களுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


மேலும் பொதுவாக திரையுலகில் பிரபலமான நபர்களை போலவே இருக்கும் மனிதர்கள் குறித்த செய்தி அவ்வப்போது வைரலாவது உண்டு. அப்படி கடந்த வருடம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் ஆஷிதா ரத்தோர் எனும் இளம்பெண். இவர் பார்ப்பதற்கு பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பது மட்டுமன்றி  ஐஸ்வர்யா ராய் வசனங்களுக்கு லிப் சிங்க் வீடியோக்கள் வெளியிட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார்.


 இது சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே பல லட்சக்கணக்கான மக்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், சமீபத்தில் ஆஷிதா ரத்தோர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அவர் கொடுக்கும் ரியாக்ஷன்கள் நெட்டிசன்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது

இந்த வீடியோ இதுவரையில் 24 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த பதிவில் பலரும் இவர் ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement