• Sep 21 2024

ஐஸ்வர்யா ராயின் பாஸ்போர்ட் போட்டோ வைரல்..அட எப்பிடி இருக்கிறார் பாருங்க…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலக அழகி என்றாலே அது நம்ம ஐஸ்வர்யா ராய் தானுங்க.பாலிவூட்டில் அதிகம் விரும்பப்படும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராய் பச்சனும் ஒருவர்.

இவரது படத்தேர்வோ, நடிப்புத் திறமையோ, அழகோ எல்லாமே எப்போதும் அனைவராலும் பேசப்படும். 1994 இல் மிஸ்வேர்ல்ட் பட்டம் வென்றதிலிருந்து இன்றுவரை உலக அழகிகளில் ஒருவராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா 20 ஆண்டுகளாக தனது பேரழகான தோற்றத்தாலும், ஸ்டைலாலும் எப்போதும் ரசிகர்களிடத்தில் சிறப்பான வரவேற்பை பெறுபவர்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யாவின் பாஸ்போர்ட் புகைப்படத்திற்காக அவர் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றார். பாஸ்போர்ட் புகைப்படத்தில் மிகவும் அழகாக இருப்பதாக அவரை ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், ஒரு சில நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதாவது "ஐஸ்வர்யாவின் ஆதார் கார்ட்டைக் காட்டினால் தான் அவர் அழகாக இருக்கின்றார் என நம்புவோம்" என்று தெரிவித்துள்ளனர்.

உலக அழகி நம்ம ஐஸ்வரியா ராய் தொடர்பான இப்பதிவுகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement