ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரித்துள்ள இந்தப் படம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
கல்கியின் நாவலை மையமாக வைத்து திரைப்படமாக உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நேற்று 28 - ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது.இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
முதல் நாள் மட்டும் உலகளவில் ரூபாய் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் விக்ரம், பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் ஐஸ்வர்யா ராய் உடன் சேர்ந்து விக்ரம் எடுத்து கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Hey Fate. Time to deal them a better hand don’t you think?! Veera X Ragini / Aditha Karikalan X Nandini #ravanan #ps2 pic.twitter.com/ViHpE1ZW5p
தற்போது அந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.மேலும் இப்படத்தை மணிரத்னம் தவறாக எடுத்து விட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!