• Nov 14 2024

ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் சொல்லவுள்ள ஐஸ்வர்யா ராய்- 2வது பேபி வரப்போகிறதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

உலக அழகி பட்டத்தை வென்ற நடிகை தான் ஐஸ்வர்யா ராய். இவர் இருவர் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியவர்.

திருமணத்தின் பின்னர் நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்த இவர் இயக்குநர் மணிரத்னனத்தின் இயக்கத்தில் உருவாகும் பொன்னயின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்னும் கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வெளியாகவுள்ளது.


இதனால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மும்பை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார். ஐதராபாத் செல்வதற்காக ஐஸ்வர்யா ராய் மும்பை விமான நிலையத்திற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகின.

 இதனைப் பார்த்தவர்கள் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் அடைந்திருப்பதாக கமென்ட் செய்துள்ளனர். நிச்சயமாக குட் நியூஸ் விரைவில் வரும்’ என்று ஒருவர் கூறியுள்ளார். இன்னொருவர் 2வது பேபி வரப்போகிறது என்று கமென்ட் செய்துள்ளார்.இதுபோல் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா ராயை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.


ஐஸ்வர்யா ராய் – நடிகர் அபிஷேக் பச்சன் இருவருக்கும் ஆராத்யா என்ற 10 வயது மகள் ஏற்கனவே உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement